மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலவரம் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் மணிப்பூருக்கு ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கியிரையாக்கப்பட்டுள்ளன. கலவரம் காரணமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் மாநில உள்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…