பாஜக தோல்வி எதிரொலி!மாயாவதி வீட்டுக்கு அகிலேஷ் யாதவ் விசிட் ….

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தமது கட்சி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து மாயாவதியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். வருகிற மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரிலும், புல்பூர் மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.கவைத் தோற்கடித்து சமாஜ்வாதிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி அதன் முடிவுக்கான தொடக்கம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment