அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரி IMA ஆர்ப்பாட்டம்.. எய்ம்ஸ் நிர்வாகம் ஆதரவு!

ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்தொரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், நீட் நுழைவு தேர்வு எழுதிய பின்னரே அறுவை சிகிச்சை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து ஆயுர்வேத மருத்துவமுறையில் இதுவரை இல்லையெனவும், இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

இந்தநிலையில், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் (IMA) நாடு முழுவதும் 10,000 இடங்களில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் நடத்தவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம், தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விபத்து, அவசர சேவை, ஐ.சி.யூக்கள், கொரோனா சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் தொழிலாளர் அறை உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளை தவிர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

19 mins ago

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…

20 mins ago

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

31 mins ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

43 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

1 hour ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

1 hour ago