#Breaking:சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் – அதிமுக பங்கேற்காது!

சென்னை:நீட் விலக்கு தொடர்பாக இன்று நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.,மேலும்,நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.  நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில்,நீட் விலக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.நீட் விவகாரத்தில் அதிமுக எதிராக தான் இருப்பதாகவும்,ஆனால்,கடந்த அதிமுக ஆட்சியில் இதே போன்று ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி,பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட நிலையில்,அதனை மீண்டும் தமிழக அரசுக்கே குடியரசுத்தலைவர் அனுப்பியபோது,அதிமுக அரசுக்கு எதிராக திமுக பல்வேறு அரசியல் விவகாரத்தில் ஈடுப்பட்டிருந்தார்கள் எனவும்,இதன்காரணமாகவே தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே,இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக  விலகிக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

14 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

19 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

25 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

43 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

55 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago