ஆப்கானிஸ்தான் : காபூல் மசூதி குண்டுவெடிப்பு – 50 பேர் பலி ..!

இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது.

இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மசூதியின் தலைவர் சையத் பசில் கூறுகையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தான் மசூதிக்குள் வந்து தொழுகையில் கலந்து கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 78 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.