தமிழ் சினிமாவில் ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 2 வருடங்களாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமலே ஆதியும்-நிக்கியும் இருந்தனர். இந்த நிலையில் வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தமிழ் சினிமாவில் உள்ள யாரையும் அழைக்காமல் தெலுங்கு சினிமாவில் உள்ள நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து கோலாகலமாக ரகசிய முறையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தனது ட்வீட்டர் பக்கத்தில் நிச்சியத்தார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த அழகான புகைப்படங்கள் இணயத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த ட்வீட்டில் “வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டோம் 24.3.22 எங்களுக்கு சிறப்பான நாள். எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்..இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும்போது உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்” என பதிவிட்டுள்ளார். இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…