லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன்  23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது.

ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார்.  இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

நாளை ஓடிடியில் வெளியாகிறது “சலார்” திரைப்படம்.!

இந்த வழக்கானது கடந்த ஜனவரி 2 -ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் ஜனவரி-19க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது என நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.என்னிடம் இருந்து பெற்ற பணத்தை லைகா திரும்ப செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது.

எனக்கு வரவேண்டிய  பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க முயற்சிக்கிறது. லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பாக்கி வைக்கவில்லை. தனக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய கணக்குத் தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனவும் விஷால் கோரிக்கை வைத்து இருக்கிறார்.