உயர்நீதிமன்றங்களில் 79 சதவீத நீதிபதிகள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள்.! மத்திய சட்டத்துறை தகவல்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி கடந்த 2 நாட்களுமே மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியுள்ள்ளது. இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி நாடு முழுவதும் உள்ள மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பற்றிய விவரங்களை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்துள்ளார். அதில், 2018 முதல் தற்போது வரையில் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 604 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் 458 நீதிபதிகள் 79 சதவீதத்தினர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 18 நீதிபதிகள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்றும், 9 நீதிபதிகள் பழங்குடியினர் என்றும் 72 நீதிபதிகள் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் 34  நீதிபதிகள் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.