ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.!

Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்தாண்டு தொடக்கத்தில் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பசுபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனும் பூமிரேகை பகுதியில் ஜப்பான் இருப்பதால் ஆண்டுக்கு 6க்கும் மேற்பட்ட நிலநடுக்கத்தை எதிர்கொள்வதாகவும் , உலகில் பதிவாகும் நிலநடுக்கங்களில் 20 சதவீதம் ஜப்பானில் மட்டுமே ஏற்படுகிறது என்றும் தரவுகள் குறிப்பிடுகிறது.