ரீல்ஸ் பிரியர்களே உங்களுக்கு தான்! இன்ஸ்டாகிராமில் அசத்தலான புது அப்டேட்!
இன்ஸ்டாகிராமில் இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவு செய்து கொள்ளலாம் என்கிற புது அப்டேட்டை மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி அசத்தலான அப்டேட்டுகளை மெட்டா நிர்வாகம் வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இன்ஸ்டாகிராமில் Schedule செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து இப்போது ரீல்ஸ் அதிகமாக செய்து வெளியிடும் பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
அது என்னவென்றால், இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதனை வெளியிடலாம் என்கிற அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. முன்னதாக 30 நொடிகள் வரை மட்டுமே ரீல்ஸ் செய்யும் அம்சம் இருந்த நிலையில், அடுத்ததாக 90 நிமிடங்கள் வரை உயர்த்தி அதற்கான அப்டேட்டை கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ரீல்ஸ் போக்கு அதிகமான காரணத்தாலும், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட காரணத்தாலும் 3 நிமிடம் வரை ரீல்ஸ் அப்டேட்டை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது இந்த நேரத்தில் இப்படியான அசத்தல் அப்டேட்டை கொண்டு வந்தால் நம்மளுடைய பயனர்கள் அதிகமாவார்கள். நம்மளுடைய வலைத்தளமும் வளர்ச்சி அடையும் என்பதற்காக இந்த அப்டேட்டை மெட்டா கொண்டு வந்தது. ஆனால், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொண்ட ட்ரம்ப் டிக் டாக் எந்தவொரு தடையும் இல்லாமல், மீண்டும், அமெரிக்காவில் செயல்படலாம்” என மீண்டும் டிக் டாக்கை அமலுக்கு கொண்டு வந்தார்.
View this post on Instagram
இருப்பினும், இன்ஸ்டாகிராம் இப்படியான அசத்தல் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது என்பது இன்றயை கால இளைய தலைமுறைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதைப்போலவே மெட்டா நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் ஒரேநேரத்தில் 10 புகைப்படங்களை வெளியிடமுடியும் என்கிற அப்டேட்டை இன்னும் விரிவாக்கம் செய்து 20 புகைப்படங்களை பதிவியேற்றம் செய்யலாம் என்கிற அப்டேட்டையும் கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.