“இனி அமெரிக்காவுக்கு பொற்காலம்… எதிரிகளுக்கு பதிலடி..” புதிய அதிபர் டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜனவரி 19) வாஷிங்டன் டிசி-யில் பதவி ஏற்றுக்கொண்டார்.

Donald trump take oath as 47th US President

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக வாஷிங்டன் டிசி-யில் திறந்தவெளி பகுதியில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழா இந்த முறை அரங்கிற்குள் நடைபெற்றது.

கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் இந்த விழாவில் முன் வரிசையில் கலந்து கொண்டார்.

முதலில் அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்று கொண்டார்.  அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட், டிரம்பிற்கு பதவி பிரமாணம் செய்தார்.  2017 முதல் 2021 வரை 45வது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் 2வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற டிரம்பிற்கு பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இசை நிகழ்ச்சியும் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. தனது வெற்றி உரையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்த மில்லியன் கணக்கானோரை நாடு கடத்தபடுவார்கள் எனவும், தனது அரசியல் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து சில முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
உள்நாட்டு எரிசக்தி கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
எரிசக்தி சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
பேச்சு சுதந்திரம் மற்றும் கூட்டாட்சி தணிக்கையின் முடிவை மீட்டெடுப்பதற்கான திட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஃபெடரல் ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பதை கட்டாயமாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அரசின் கொள்கைகளில் ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

அதே போல முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் செயல்பாட்டில் இருந்த 78 திட்டங்களை நிறுத்துவதற்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
tamilisai soundararajan
kantara chapter 1
seeman
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels