அர்ஜுன் தாஸுடன் காதலா..? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி.!
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த காதல் வதந்தி தகவல் பரவுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், கைதி படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமியும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் நேற்றிலிருந்து தகவல் பரவி வருகிறது.
ஏனென்றால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கடந்த (நேற்று) ஜனவரி 11 அன்று தனது இன்ஸ்டாகிராமில், அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதயத்துடன் படத்தைத் தலைப்பிட்டார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் மற்றும் காதலிக்கிறார்கள் என்று ரசிகர்களிடமிருந்து ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும் சில பிரபலங்களும் அவர்களுடைய பதிவிற்கு கீழ் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
காதல் வதந்திக்கு விளக்கம் அளித்த ஐஸ்வர்யா லட்சுமி.!#AishwaryaLekshmi | #ArjunDas @iam_arjundas | @AishwaryaLekshmi pic.twitter.com/X6dEKUuKep
— CineBloopers (@CineBloopers) January 12, 2023
ஆனால், இது வெறும் வதந்தி தகவல் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” நண்பர்களே நான் கடைசியாக வெளியிட்ட புகைப்படம் இவ்வளவு பெரிய விஷயமாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டோம். காதல் எல்லாம் ஒண்ணுமில்லை நாங்கள் இருவரும் நண்பர்கள்” என விளக்கம் கொடுத்துள்ளார்.