மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்..!

மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.  

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என கூறி 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கிய நிலையில், அந்த அமைப்புக்கு தொடர்புடைய சமூக வலைத்தளங்களையும் முடக்க உத்தரவிட்டது

இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக்கு தடை செய்த நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

Leave a Comment