சட்ட ஆலோசகரை சீண்டிய சோயிப் அக்தர்…,அவதூறு வழக்கு பதிவு !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் தபாசுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிஸ்விற்கு சட்ட அனுபவம் இல்லை என்றும் சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே ரிஸ்வியின் வேலை என்றும் விமர்சித்துள்ளார்.

இதனால் ரிஸ்வி சோயிப் அக்தர்மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளார். மேலும் சட்ட குறித்து பேசுகையில் கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பார் கவுன்சில் அறவித்துள்ளது.