வீட்டு வாடகையை செலுத்துகிறோம்- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,
டெல்லியில் அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு நில உரிமையாளர்கள், வீடு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை பணம் கேட்டு தொல்லைத் தரவேண்டாம்.வாடகை தரமுடியாமல் இருப்பவர்களுக்கு அரசே மூன்று மாதங்களுக்கு வாடகை தொகையை தரும்.இந்த உத்தரவையும் மீறி வாடகை வீட்டில் வசிப்போரிடம் வாடகை கேட்டு தொந்தரவு அளித்தால் வீட்டு உரிமையாளர், நில உரிமையாளர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.