கோட்சே குறித்த கருத்து : தீவிரவாதி பிரக்யா-ராகுல் காந்தி ட்வீட்

நேற்று மக்களவையில் விவாதத்தின்போது பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இவர் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியது.இதனால் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிரக்யாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.
இந்த விவகாரம் இன்றும் நாடாளுமன்ற அவைகளில் வெடித்தது.மேலும் பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்குவதாக பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Terrorist Pragya calls terrorist Godse, a patriot.
A sad day, in the history of
India’s Parliament.— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2019
இந்த நிலையில் பிரக்யா சிங் தாகூர் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024