அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற டிரம்ப் அரசு முடிவு!

தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி வெளிநாட்டவரின் தொழில் விசாக்களை நீட்டிக்க முடியாது என்று டிரம்ப் அரசு கெடுபிடி காட்டி வருவதால், கணினித்துறையில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து தாய்நாட்டுக்கு திரும்பக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஹெச்.1.பி விசாவில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்து இந்தியர்களின் கனவை பொய்யாக்கினர் அதிபர் ட்ரம்ப்…
தற்போதுள்ள நடைமுறைப்படி, விசா நீடிப்பின்மூலம் 6 ஆண்டுகளுக்கு அவர்கள் பணியில் நீடிக்க முடியும். அதற்குள் கிரீன் கார்டு என்ற குடியுரிமையைப் பெற்றுவிட்டால் காலவரம்பின்றி அவருடைய விசா நீட்டிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து இந்த நடவடிக்கையை ,மேற்கொண்டால் இந்தியர்களின் கனவு பொய்யாகிவிடும் என்பது தான் உண்மை …
source: dinasuvadu.com

Leave a Comment