வன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வன்முறையில் 394 போலீஸ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஐ.சி.யூ வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லி காவல்துறையால் 25க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக அடையாளம் காணும் முறையைப் பயன்படுத்துகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி மற்றும் வீடியோ காட்சிகளின் சேகரித்து வருகிறோம். எந்த குற்றவாளியும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு, 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசநரனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

11 mins ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

23 mins ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

1 hour ago

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

2 hours ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

3 hours ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

3 hours ago