தேமுதிகவுக்கு 2 சதவீத வாக்கா…? இங்கே வந்து பார்க்கவும்…விஜயகாந்த் மகன் ஆவேசம்…!!

  • பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
  • தேமுதிகவுக்கு 2 சதவீதம் வாக்கு என்று சொல்லும் மீடியாக்கள் இங்கே வந்து பார்க்கவும் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் , தொண்டர்களின் வரவேற்பு ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்தது போன்று இருந்தது. காலையிலிருந்து அப்பா முகத்தில் முழிப்பேன் இல்லையோ அனைத்து கட்சி தலைவர்களும் அப்பாவை வந்து பார்க்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக_விற்கு 2% தான் வாக்கு இருக்கின்றது  என்று பேசும் மீடியாக்கள் இங்கே வந்து பார்க்கவும்.இங்கே எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை பார்க்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார் .

Leave a Comment