Categories: Uncategory

கதிராமங்கலம் போராட்டகாரர்கள் 10 பேரின் காவல் நீட்டிப்பு: கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த கதிராமங்கலத் தில் கடந்த மாதம் 30-ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தர்ம ராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங் கட்ராமன் ஆகியோர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளை வித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
கைதான 10 பேரையும் கும்ப கோணம் நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி ஆஜர்படுத்தியபோது, அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிமன்ற விசா ரணைக்காக அவர்கள் 10 பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு நேற்று போலீஸார் அழைத்து வந்தனர். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோ.ரவிச்சந்திரன், அண்ணாதுரை மற்றும் கைது செய் யப்பட்டவர்களின் குடும்பத்தினர், கதிராமங்கலம் பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் முன்பு 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களுக்கு ஜூலை 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப் பட்டவர்களை அவர்களது உறவினர் கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர், 10 பேரையும் சிறைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றும் போது, அங்கிருந்த அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.
இவ்வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள ரமேஷ் என்பவரின் மனைவி கவிதா(27), பேச முடி யாத, காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் மனவேதனையுடன் இருந்தார். இந்நிலையில், நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் கணவரைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். எப்படியாவது வீட்டுக்கு வந்துவிடுவார் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், காவல் நீடிக்கப்பட்ட தால், சிறைக்குச் செல்ல ரமேஷை மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றியபோது, கவிதா கதறி அழுதார்.

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

8 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

11 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

11 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

11 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

11 hours ago