ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இவ்வளவு மவுசா?! நீண்டுகொண்டே போகும் காத்திருப்போர் பட்டியல்!!!

பட்ஜெட் மாடல் காரகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாடல் காராக உருவெடுத்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இதன் டிசைன், வசதி, விலை என அனைத்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இதன் முன்பதிவு களைகட்டி வருகிறது.

இதனை பற்றி  ஷோரூம்களில், 2.11 லட்சம் பேர் வாங்குவதற்கு விசாரித்து சென்றதாகவும், 38,500 நபர்கள் வாங்குவதற்கு புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போவதால் காத்திருப்பு காலம் நான்கு மாதம் வரை நீண்டு கொள்கிறது. முன்கூட்டியே புக்கிங் செய்தவர்களுக்கு இரண்டு மாதங்களில்  டெலிவரி செய்ய நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை கவரும் தோற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த ரக கார்களில் மிகச் சிறப்பான கேபின் இடவசதியை இந்த மாடல் பெற்றுள்ளது. மேலும், இந்த மாடலில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய சான்ட்ரோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதி என வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த மாடல் உருவாகியுள்ளது.

இந்த ஹூண்டாய் சான்ட்ரோ காரில் இருக்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாது, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைப்பதும் இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயம். இந்த புதிய மாடல் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

DINASUVADU

 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

28 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago