வங்கி மோசடி:ரூ. 824 கோடி.! கனிஷ்க் நிறுவன உரிமையாளர் கைது..!!

நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)  சிபிஐயிடம் புகார் அளித்தது.

சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர்.  இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியின் ஒப்புதலின் பேரில் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.50 கோடி கடனை கனிஷ்க் நிறுவனம் வாங்கியது. இந்தக் கடன்களை வைத்து மற்ற வங்கிகளிலும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடன் பெற்றுள்ளது. வரவு செலவு கணக்குகளை போலியாக காண்பித்து கிட்டத்தட்ட 14 வங்கிகளில் கனிஷ்க் நிறுவனம் ரூ.714 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ.214 கோடியும்  பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.115 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.45 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இந்த கடன்களுக்கு கொலேட்டரல் செக்யூரிட்டியும் வங்கிகள் பெற்றுள்ளன.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தக் கடன்களுக்கான வட்டித் தொகையை கனிஷ்க் கோல்டு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்த நிலையில் நிறுவனத்தை ஆடிட் செய்வதற்கு வங்கிகள் அமைப்பு  சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்து ஆவணங்களும் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐயிடம் வங்கிகள் கூட்டமைப்பு புகார் அனுப்பியது,

இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில்  கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை  அமலாக்கத்துறை முடக்கியது.

இதையடுத்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட 24 வங்கிகளில் மோசடி செய்த  கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜூன் 8 வரை காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…

2 hours ago

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

11 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

15 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

15 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

15 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

16 hours ago