Categories: Uncategory

யோகா செய்தால் ஆயுள் கூடும் அதிமுக அமைச்சர் பேச்சு…!!

யோகா செய்தால் ஆயுள் கூடும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை சாப்பிடுவதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடந்து வருகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்து, கன்னியாகுமரி வழியாக சிவகாசி வந்தடைந்தது.
மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.ராதாகிருஷ்ணன் எம்பி, கலெக்டர் சிவஞானம், எஸ்.பி. ராசராசன், சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
ஸ்வஸ்த் யாத்திரை என்ற பெயரில் நடக்கும் இந்த பேரணியில், ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி டெல்லி சென்றடைய உள்ளது.
மேற்கிந்திய உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன் அதிகமாகி, பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை ஆரோக்கியமான முறையில் பேணிகாக்க வேண்டும்.சுகாதாரமான வாழ்கை வாழ்வதற்கு, சிறிது சிறிதாக வாழ்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சுகாதாரமான வாழ்கை என்பது, சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறைகள் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். தினமும் யோகா செய்ய வேண்டும். நான் 25 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன்.இன்றைய தலைமுறையினர் யோகா செய்வதை பழகிக்கொள்ள வேண்டும். அதனால் ஆயுள் கூடும்.மேற்கண்டவாறு அவர் பேசினார்.
dinasuvadu.com 

Recent Posts

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி – அரசாணை வெளியீடு!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…

42 mins ago

ஐ யம் வெயிட்டிங்.. விஜயுடன் கூட்டணியா.? சீமான் கலக்கல் பதில்.!

சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting'  என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…

49 mins ago

100 ரூபாய்க்கு அளவற்ற பயணம்! மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!

சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம்…

1 hour ago

கடைசி 5 ஓவர் வந்தால் போதும் 50 ரன் அடிப்பாரு’ ! தோனியின் ஃபார்ம்மை வியந்து பாராட்டிய டிவில்லியர்ஸ் !!

சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல்…

2 hours ago

நெய்யை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க.!

Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…

2 hours ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழக கனமழை நிலவரம்…

சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…

2 hours ago