முல்லை பெரியாரை திறந்ததால் கேரளாவுக்கு வெள்ளம் ஏற்பட்டதா..?கேரளா முதல்வருக்கு தமிழக முதல்வர் பதில்..!!

கேரளா அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என தெரிவித்தது.
இதற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி கேரளாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசிய முதல்வர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கேரளா கூறுவது தவறு. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரேயடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை கேரள அரசு வேண்டுமென்றே நீர்தேக்கும் அளவை குறைப்பதற்காக முல்லைப் பெரியாறு அணை மீது பழிசுமத்துகிறது.கேரள முழுவதும் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டதால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை அடியை 140 அடிக்கு குறைக்க சொல்லி தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில் அதனை ஏற்க மறுத்தார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 140 அடி வரை முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
DINASUVADU

Leave a Comment