தெவிட்டாத தேனில் உள்ள மருத்துவ குணங்கள்

  • தேனில் உள்ள  மருத்துவ குணங்களும், அதன் மூலம் குணமாகும் நோய்களும்.

தேன் நாம் அனைவரும் அறிந்த மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பொருளாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனை விரும்பி உண்பது உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியது.

பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.

சித்த மருத்துவ முறையில் தேன்

அலர்ஜி

சித்த மருத்துவ முறையில், தேன் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் இரு குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொண்டு வந்தால், பூரண விடுதலை பெறலாம்.

தொண்டை

தொண்டையில் பிரச்னை உள்ளவர்களுக்கு தேன் ஒரு மருந்தாக பயன்படுகிறது. குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு மற்றும் வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை உட்கொண்டு வந்தால் பூரண விடுதலை அடையலாம்.

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது.

மேலும், இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொலஸ்டிரால் குறையவும் செய்கிறது.

உடல் எடை

உடல் எடையை குறைப்பதில் தேன் முக்கிய பங்கினை வகிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.மேலும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உயிர்கொல்லி நோய்களுக்கு கூட மருந்தாகும்

மருந்துகளால் கூட சுகம் தர முடியாத நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது தேன். கேன்சரைத் தடுக்கும், ஈரலை பாதுகாக்கும், இதயத்தைக் காக்கும், சர்க்கரை நோய்கூட வராமல் தடுக்கும் இனிப்பான உணவு ஒன்று உண்டென்றால், அது `தேன்` மட்டுமே.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

21 mins ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

22 mins ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

30 mins ago

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

4 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

12 hours ago