Categories: Uncategory

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் …!!!

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில்  எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.அமெரிக்க ஓப்பன் டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச்.

DINASUVADU

kavitha

Recent Posts

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

51 mins ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

58 mins ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

1 hour ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

2 hours ago