உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி

World Test Championship: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலை ஐ.சி.சி தற்போது வெளியிட்டுள்ளது.

Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!

அந்த வகையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணி கூடுதலாக புள்ளிகள் பெற்று முன்னிலையை பலமாக வலுப்படுத்தி உள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணி கடும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 68.51 % பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி 60.00 % பெற்றுள்ளது.

Read More – IPL 2024 : ஐபிஎல் தொடரை நேசிப்பதற்கு இதுதான் காரணம் ..! மனம் திறந்த விராட் கோலி ..!

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (59.09 %), வங்காளதேசம் (50.00 %), பாகிஸ்தான் (36.66 %) அணிகள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் (33.33 %), தென் ஆப்பிரிக்கா (25.00 %), இங்கிலாந்து (17.5 %), இலங்கை (00.00 %) உள்ளன

 

Leave a Comment