Xiaomi 14: 50 எம்பி டிரிபிள் கேமரா, 4,600 mAh பேட்டரி..! விரைவில் அறிமுகமாகும் சியோமியின் புதிய மாடல்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸை வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த சீரிஸ் சீனாவில் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா என மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம்.

தற்போது இதில் இருக்கும் சியோமி 14 ஸ்மார்ட்போனில் இருக்கும் டிஸ்பிளே, பிராசஸர், கேமரா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை டிப்ஸ்டர் அன்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, 14 சீரிஸில் உள்ள சியோமி 14 ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தது.

Vivo Y200 5G: இந்தியாவில் களமிறங்குகிறது விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.! எப்போது தெரியுமா.?

டிஸ்பிளே

சியோமி 14-ல் 1.2K ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.44 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே பொருத்தப்படலாம். டால்பி விஷன் சப்போர்டுடன் கூடிய இந்த டிஸ்பிளே 2800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கலாம். இதனால் அதிகபட்ச ஒளியில் கூட டிஸ்பிளே தெளிவாகத் தெரியும்.

இதற்கு முந்தைய சீரிஸில் வெளியான மாடல் ஆன சியோமி 13 உடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 2400 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.36 இன்ச் எஃப்எச்டி அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் வரும் அக்டோபர் 25ம் தேதி அறிமுகமாகவுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இது புதிய எம்ஐ ஓஎஸ்-ல் இயங்கும் என்று கூறப்படுகிறது. இதே போல ஐ-க்யூ நிறுவனம் தயாரித்து வரும் ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போனிலும் இதே சிப்செட் பொறுத்தப்படலாம்.

அதோடு ரியல்மீ-இன் ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இந்த புதிய பிராசஸர் பயப்படுத்தப்படவுள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் முதலில் வெளியாகிறதோ, அந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

கேமரா

சியோமி 14 ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சந்தைகளில் அறிமுகமாகலாம். அதன்படி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொறுத்தப்படலாம்.

முக்கியமாக இந்த ஸ்மார்ட்ட்போனில் ஐஆர் பிளாஸ்டர் சென்சார் இருக்கலாம். இதை வைத்து டிவி, மியூசிக் பிளேயர் மற்றும் பிற சாதனங்களுக்கான ரிமோட் கண்ட்ரோலாக உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.

Galaxy Z Flip 5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமாகும் சாம்சங்கின் ஃபிளிப் 5.! விலை எவ்வளவு தெரியுமா..?

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 4,600 mAh திறன் கொண்ட பேட்டரி பொறுத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 90 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். மேலும், தற்போது சந்தைகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில் உள்ளது போல 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம்.

இதனால் மற்ற ஸ்மார்ட்போன்களை கூட சார்ஜ் செய்ய முடியும். இது எல்பிடிடிஆர் 5x ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம். இதன் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சியோமி 14 ஸ்மார்ட்போன் ஆனது வரும் அக்டோபர் 27ம் தேதி அல்லது நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.