இந்தியாவில் மோசமடையும் பருவநிலை….குறைகின்றது மின் உற்பத்தி….அதிர்ச்சி தகவல்…!!

பருவநிலை மாற்றம் இந்தியாவில் மிகவும் மோசம் அடைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை அளித்திருக்கின்றது.
உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.இதில் அமெரிக்கா முதல் இடத்திலும் , சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.அதுமட்டுமில்லாமல் காற்றாலை மின் உற்பத்தி குறித்து ஆண்டுதோறும் அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகின்றது.இந்த ஆய்வின் அடிப்படையில்  வரும் காலங்களில் இந்தியாவின் பருவநிலை மாற்றம் மிகவும் மோசமான கட்டத்தை எட்டும் என்று அதிர்ச்சியான தகவல் ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அடுத்த 5 வருடத்தில் காற்றாலை மின் உற்பத்தின் அளவை பன்மடங்கு உயர்த்த வேண்டுமென்று இந்தியா திட்டமிட்ட நிலையில் இந்த ஆய்வரிக்கை  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆய்வறிக்கை மூலமாக காற்று மாசுபடுவது இந்தியாவில் தான் அதிகம் என்று தெரிவித்துள்ளது.இதையடுத்து  இனி வரும் காலங்களில் எந்த பருவநிலையிலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகப்படுத்த முடியாது என்று இந்த ஆய்வறிக்கை மூலமாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 63% மின் உற்பத்தி காற்றாலை மூலமாக  கோடை காலங்களில் இந்தியா உற்பத்தி செய்கிறது.இந்நிலையில் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கோடை காலங்களில் மின் உற்பத்தி 13% சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையால் வரும் காலங்களிலும் இந்த மின் உற்பத்தி அளவு சதவீதம் மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின் உற்பத்தியின் இந்த ஆய்வறிக்கையை குறித்து இந்திய அரசு தற்போது ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment