உலக தண்ணீர் தினம் – வீடியோ வெளியிட்ட முதல்வர்..!

உலக தண்ணீர் தினத்தில் கிராமசபைக்கூட்டம் ஏன் நடத்தப்படுகிறது என முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டம் – முதல்வர் விளக்கம் 

இந்த நிலையில், உலக தண்ணீர் தினத்தில் கிராமசபைக்கூட்டம் ஏன் நடத்தப்படுகிறது என முதல்வர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர்.

உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும், மாறினாலும்,  மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாதது.  அதனால்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் ஐயன் வள்ளுவன்.  தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாடுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது.  தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ‘நிலம் நீர் வழி வசம்போடு- ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்கிறது.  தண்ணீர் என்று சொல்லாமல் ‘அமுதம்’ என்றவர் திருவள்ளுவர்.

மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் கூடினாலும் தீமை ஏற்படும் என்கிற மருத்துவ புலமையோடு ‘மிகவும் குறையினும் நோய் செய்யும்’ என்றார் வள்ளுவர்.  திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது.  நீர்நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர் தமிழர்.

குட்டை,  குளம்,  ஊரணி,  ஏரி, ஏந்தல்,  கண்மாய்,  ஆறு,  நீரோடை,  கடல் என்று பிரித்து பெயர் சூட்டினர்.   எல்லாமே நீர் உள்ள இடம்தான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையின் அளவு கொண்டது.

கடல் நீரை உன் நீர் என்றும்,  ஆற்று நீரை நன்னீர் என்றும் ,  குடிநீரை இன்னீர் என்றும், குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும் நீரில் தன்மைக்கு ஏற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம்.  உடம்பை குளிர்வித்தலை குளித்தல் ஆகும். தாயைப் படித்தாலும் தண்ணீரை பலிக்காதே என்பதுதான் தமிழின் பழமொழி.

நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்.  நீரை வீணாக்கக்கூடாது;  பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.  நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு ஒரு நாட்டின் பலம் என்பது நீர் வளமாக,  இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  புவி வெப்பமயமாகி வருகிறது,  இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் மட்டும் தான்.  நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை அனைவரும் உணர்வீர்கள்.  தண்ணீரை காப்போம்; தாய் நிலத்தை காப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment