Categories: இந்தியா

WomenReservationBill: பிரதமர் மோடி எடுக்கும் முடிவு நாட்டின் நலனுக்காகவே இருக்கும்.! மகாராஷ்டிர முதல்வர்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் தொடக்க நாளான நேற்று மட்டும் பழைய கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம், பழைய நாடாளுமன்றத்தின் கடைசி நாள் கூட்டமாக நேற்று நடைபெற்ற நிலையில், இன்று புதிய கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார். இந்த மசோதா மீதான விவாதம் நாளை மக்களவையிலும், நாளை மறுநாள் மாநிலங்களவையிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி எந்த முடிவை எடுத்தாலும், அது நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலனுக்காகவே இருக்கும். அவரது இந்த முடிவை வரவேற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! 8 பேர் கைது.!

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன்…

10 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியை தருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் !

மு.க.ஸ்டாலின் : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ்…

25 mins ago

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

10 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

11 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

11 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

16 hours ago