இந்தியா

மொட்டை மாடியில் இருந்து விழுந்த பெண்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

பெங்களூரு : டி.ஜே.ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் பகுதியான கனகநகர் பகுதியில் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்.கே.பேலஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் கணவருடன் அந்த பெண் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கீழே இருந்த சோப்பில் மிதித்து  கீழே விழுந்ததாக அந்த பகுதி வட்டாரங்கள் தகவலை தெரிவித்தன. கீழே விழுவதற்கு முன்பு மனைவியை மேலே இருந்த அவருடைய கணவர் தாங்கி பிடித்து கொண்டு இருந்தார்.

ஆனாலும், கொஞ்ச நேரம் மட்டுமே அவரால் பிடித்து இருக்க முடிந்தது. பின் அவருடைய மனைவி கீழே விழுந்தார். கிழே நிறைய இருசக்கர வாகனங்கள் இருந்த நிலையில், அதில் விழுந்து அந்த பெண்ணின் தலையில் பயங்கரமாக காயமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு இருந்த ஒருவர் பெண்ணை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கீழே விழுந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அந்த பெண் தற்போது கோமா நிலையில் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பெண் கீழே விழும்போது அக்கம் பக்கத்தில் மாடியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும், கீழே இருந்தவர்கள் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent Posts

‘சாதிய காரணங்களுக்காக கொலை நடக்கவில்லை’ – ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி ..!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையரான சந்தீப்…

5 mins ago

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் எப்போது.? அவரது உடல் எங்கு வைக்கப்பட உள்ளது.?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலானது சென்னை செம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில…

1 hour ago

நீதிமன்றத்தில் அரசு வேலை …37 காலியிடங்களை நிரப்ப அறிய வாய்ப்பு ..! யூஸ் பண்ணிக்கோங்க !!

TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல.! திருமா பரபரப்பு பேட்டி.!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று…

2 hours ago

இந்தியன் 2வுக்கு முன்னாடி இந்தியன் 1 சாதாரணம் தான்! கமல்ஹாசன் பேச்சு!

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும்…

2 hours ago

வணங்கானை பார்க்க தயாரா? டிரைலர் தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும்,…

2 hours ago