கேரளாவில் உள்ள பர்ப்பிள் தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது.

வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வரும். இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் பூமிக்குள் சென்றுவிடும். இந்த பர்ப்பிள் தவளை பார்ப்பதற்கு உடல் பெரியதாகவும், கால்கள், தலை, வாய் ஆகியவை சிறிய அளவிலும் இருக்கும். இதன் எடை 170 கிராம் என்றும், 6 முதல் 9 செ.மீ. நீளமும் உடையது.

இது பூமிக்கு கீழே உள்ள மண்புழுக்களை அதன் நாக்கால் கவர்ந்திழுத்து உண்ணும்.  மர்மம் நிறைந்த இதன் வாழ்க்கை முறை இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தவளையை அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இண்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் சேர்த்துள்ளது.

மருத்துவ குணம் நிறைந்த இந்த பன்றி மூக்கு தவளையை பலரும் வேட்டையாடுகின்றனர். மேலும், கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இது காணப்பட்டுள்ளது. அதனால், இந்த அபூர்வ இனத்தை பாதுகாக்க கேரள வனத்துறை மாநில அரசுக்கு இந்த பரப்பிள் தவளையை மாநில தவளையாக அறிவிக்க பரிந்துரைத்துள்ளது.

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

19 seconds ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

13 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

49 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

52 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago