மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

வாட்ஸஅப் நிறுவனம் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்களைப் புகுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சம், ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் போன்றவற்றை அறிமுகம் செய்தது.

இது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிக்கு மட்டுமல்லாமல், வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் செயலில் ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

இதனால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடிவும். அதேபோல இவ்வாறு அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களது மொபைல் கேலரியில் சேமித்து வைக்க முடியாது. ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. உங்களால் அதை அழிக்க மட்டுமே முடியும்.

இதனால் பயனர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் கருதியது. இப்போது இதே அம்சத்தை மொபைல் செயலியைத் தொடர்ந்து, வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிற்கு புதிதல்ல. கடந்த ஆண்டே இந்த வியூ ஒன்ஸ் அம்சம் டெஸ்க்டாப்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

செயலில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்.! எவ்வாறு பாதுகாப்பது.?

ஆனால் 2022 நவம்பர் 1ம் தேதி இந்த அம்சத்தை நீக்கியது. இந்நிலையில் மீண்டும் இந்த அம்சம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தை விண்டோஸ் பயனர்கள் மட்டுமல்லாமல் மேக் ஓஎஸ் பயனர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சம் சில பயனர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இது வரும் வாரங்களில் மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தப்படும்.