குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள்  ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம்.

குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது?

குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் வெப்பநிலை குறையும் சமயங்களில் நமது உடலில் நமது இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் காணப்படும். இப்படிப்பட்ட சமயங்களில் சிலருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நமது உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில், குளிர்காலங்களில் நாம் உடலுக்கு ஒத்துக்  கொள்ளாத உணவுகளை உட்கொள்ளுதல், அதிகப்படியான மதுபானம் அருந்துதல் போன்ற பிரச்னைகளும் இதயம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்பட வழிவகுக்கும்.

குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? இதோ அதற்கான தீர்வு.!

குறிப்பாக இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி, இருமல் போன்ற சிறிய பிரச்சனைகள் கூட சில சமயங்களில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். என இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், உடலில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

குளிர்காலங்களில் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

பொதுவாக குளிர்காலங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானவர்களுக்கு உடல் சம்பந்தமான பிரச்சனை ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இந்த காலகட்டங்களில், நமது உணவு மற்றும் வாழ்க்கை நடைமுறைகளில் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம்.

குளிர்காலங்களில் நமது உடலை வெப்பமாக வைத்துக் கொள்வது அவசியம். குளிர்காலங்களில் தான் அதிகமாக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.

முக்கியமாக குளிர்காலங்களில் செரிமானத்தை எளிதாக்கக்கூடிய உணவை உட்கொள்வது அவசியம். கடினமான உணவுகளை தவிர்த்து, மென்மையான உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடலில் ஏதாகிலும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அதனை அலட்சியமாக வைத்திருக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கேற்ற சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இதயம் தொடர்பான மருத்துவரை அணுகுவது நல்லது.

எனவே, குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க மேற்கண்ட வழிமுறைகளை கைக்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.