Categories: Uncategory

ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதியது.இப்போட்டியானது  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ), டேவிட் வார்னர் களமிறங்கினார்.ஆட்டம் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் 6  ரன்னிலும் , டேவிட் வார்னர் 3 ரன்னிலும் வெளியேறினார்.
பின்னர்  உஸ்மான் கவாஜா களமிறங்கி விளையாட சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார்.பிறகு களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி அணியின் சற்று எண்ணிக்கையை உயர்த்தினார்.பிறகு அலெக்ஸ் கேரி கூட்டணியில் ஸ்மித் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

சிறிது நேரத்தில்  அலெக்ஸ் கேரி 45 ரன்னில் வெளியேறினர்.பிறகு களமிறங்கிய நாதன் கொல்டர் , ஸ்மித் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர் 92 ரன்னும், ஸ்மித் 73 ரன்னும் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டையும் , ஆண்ட்ரே ரஸல் , ஓஷேன் தாமஸ் , ஷெல்டன் கோட்ரெல் தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி  289 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆட்டம் தொடக்கத்திலே 1 ரன்னுடன் வெளியேறினார். கிறிஸ் கெய்ல் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர் ஆனால் அவரின் அதிரடி ஆட்டத்தை  சிறிது நேரத்திலே மிட்செல் ஸ்டார்க் கெய்லை 21 ரன்னில்  அவுட் ஆக்கினார்.
பின்னர் ஷை ஹோப்  , சிம்ரோன் ஹெட்மியர் இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 273 ரன்கள் எடுத்து.15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷை ஹோப் 68 ரன்னும், ஷெல்டன் கோட்ரெல் 51 ரன்னும் குவித்தனர்.ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில்  மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டையும் , பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
 

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

8 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

23 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

34 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

38 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago