விஜயனின் அம்பில் அணு ஆயுதம்.. மகாபாரத காலத்திலேயே அணு ஆயுதம் கண்டுபிடிப்பு.. ஆளுநரின் சர்ச்சை கருத்து..

  • மகாபாரத காலத்திலேயே அணு ஆயுதம் கண்டுபிடிப்பு.
  • கண்காட்சியில் மேற்கு வங்க ஆளுநர் சர்ச்சை கருத்து.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் பறக்கும் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பல ஆண்டுக்கு முன்பே  ராமாயண காலத்திலேயே விமானங்களைப் போன்ற பறக்கும் தேர்கள் இருந்தது என்றும்,  மகாபாரதத்தில் வில்லுக்கு விஜயன் எனப்படும் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது என்றும், எனவே உலகம் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என்றார்.

Image result for அர்ஜுனன்

இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதற்கிடையே தனது கருத்து குறித்து விளக்கமளித்த அவர்,  இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் அறிவியல் பின்புலத்தில் தான் நம்பிக்கை கொண்டிருக்கிறது. சிலர் ராமரை புராண கதாபாத்திரம் என்று சொல்கிறர்கள், அதை தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
என்று தனது தரப்பு கருத்தை எடுத்துரைத்தார்.