தமிழ்நாடு

அரசாங்கங்களே நிகழ்த்தும் வன்முறை – நடிகர் சூர்யா கடும் கண்டனம்.!

சென்னை : கள்ளச்சாராய விவகாரம் குறித்து அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது. கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மதுவிலக்கு கொள்கை’ என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாரயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்? அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

3 mins ago

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் இறுதி பேச்சு.! 2 முக்கிய பதவிகள் ராஜினாமா.!

UK தேர்தல்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவி ஆகியவற்றில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.…

16 mins ago

அட இதுக்கெல்லாம் கூட நீங்க பயப்படுவீங்களா? பயத்தைப் போக்க நச்சுனு நான்கு டிப்ஸ்.!

Life style -பயத்தை போக்க என்ன  செய்யலாம்   என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும்  பாதிப்பு ஏற்படும் ,ஆனால்…

38 mins ago

அவர் உலகக்கோப்பையை வெல்ல விரும்பினார் …ஆனால் முடியவில்லை..! மனம் திறந்த இர்பான் பதான்.

இர்பான் பதான் :  முன்னாள் வீரரான இர்பான் பதான் 2024 கோப்பையை வென்றது அந்த முன்னாள் வீரருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். நடைபெற்று முடிந்த…

59 mins ago

பிளாப் ஆன சுந்தர் சி படம்…தேம்பி தேம்பி அழுத குஷ்பு மகள்!

சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி…

1 hour ago

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று…

2 hours ago