பட்டினி போடுவது தவறு! பசியை போக்க ரயிலை நிறுத்திய கேப்டன் விஜயகாந்த்!

கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் என்றுமே பலருடைய மனதில் நிற்கும் என்றே சொல்லலாம். அவர் செய்த உதவிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் சாப்பாடு போட்டு மற்றவர்கள் சாப்பிடுவதை அழகு பார்த்தது தான் என்றே சொல்லலாம்.

விஜயகாந்த் மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பசியை போக்குவதற்காக விஜயகாந்த் ரயிலை நிறுத்திய சம்பவத்தை நடிகர் பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜயகாந்த் மற்றும் நெப்போலியன் திரைக்கலைஞர்கள் பலர் ஆகியோர் எல்லாம் சேர்ந்து கார்கில் நிதி திரட்ட மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்தினார்களாம். அந்த கலை நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் முன்னிலை  வகித்தாராம். பிரமாண்டமாக அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து ரயிலில் பொன்னம்பலம் உட்பட சுமார் 200 பேர் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்களாம்.

கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!

சென்னை திரும்புவதற்குள் சரியாக மணிs நேரம் இரவு 10 மணியை தாண்டிவிட்டதாம். நேரம் ஆகிவிட்டது என்பதால் பலர் சாப்பிடாமல் பசியில்  இருந்தார்களாம். இந்த தகவலை கேட்ட கேப்டன் விஜயகாந்த நெப்போலியனிடம் அடுத்து வரும் ஸ்டேஷனில் வண்டியை 10 நிமிடம்  நிற்க வைத்து விடுங்கள். அதற்குள் நான் அனைவருக்கும் உணவு வாங்கி வந்துவிடுகிறேன் என்று கூறினாராம்.

அதற்கு நெப்போலியன் ஒருவ வேலை தானே ‘பரவாயில்லை. சமாளித்து கொள்வோம் என்று கூறினாராம். உடனடியாக கேப்டன் விஜயகாந்த்   ‘என்னை நம்பி வந்தவர்களை பட்டினி போடுவது தவறு’ என்று கூறினாராம். பிறகு நெப்போலியன் உடனடியாக  ரயில் ஓட்டுனரிடம் சென்று பலருக்கும் பசியாக இருக்கிறது என்று நிலைமையை எடுத்து கூறினாராம்.

நெப்போலியன் கூறிய பிறகு வண்டி சரியாக அடுத்த ஸ்டேஷனில் நின்றது. நின்றவுடன் விஜயகாந்த் தன்னுடன் சிலரை அழைத்துச்சென்று அங்கிருந்த சிறு உணவகங்களில் 200 பேருக்கு தேவையான டிபன்களை எப்படியோ வாங்கி வந்து வந்து அனைவருடைய பசியையும் போக்கினாராம். இந்த உதவியை எல்லாம் மறக்கவே மாட்டேன் ” என நெப்போலியன் பேட்டியில் கூறியுள்ளார்.