வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்! மத்திய அமைச்சர் பாராட்டு..!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கிய சுரேகா யாதவ் என்ற பெண்ணை வாழ்த்திய மத்திய அமைச்சர் 

சுரேகா யாதவ் என்ற பெண், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் (CSMT) வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கி உள்ளார். இவர், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்

இதனையடுத்து, சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வந்தே பாரத் – நாரி சக்தியால் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் ஸ்ரீமதி சுரேகா யாதவ் என பதிவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் சதாராவை பூர்வீகமாகக் கொண்ட திருமதி யாதவ், 1988 ஆம் ஆண்டு நாட்டின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் ஆனார். அவரது சாதனைகளுக்காக, அவர் மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Leave a Comment