நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்-  45 பறக்கும் படைகள் அமைப்பு..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் வாகன சோதனையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தல், வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்தால் உரிய ஆவணம் சமர்ப்பித்த பிறகு பணம் திருப்பித் தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.