இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.இந்தியாவும் விமான சேவையை நிறுத்தியது.பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு புதிய உருமாறிய தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது.அந்த வகையில் இன்றுவரை இந்தியாவில் இதுவரை 38 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட சுகாதார மையங்களில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.