இந்திய சாலைகள்… அமெரிக்க முன்னாள் அதிபர் கூறியதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு.

அமெரிக்க முன்னாள் அதிபர் அமெரிக்க சாலைகள் பற்றி கூறியதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சுட்டிக்காட்டிய பேசினார்.

இன்று தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இன்று பிரதமர் மோடி 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள உட்கப்பட்டமைப்பு திட்டங்களையும், ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நெடுஞ்சாலை வளர்ச்சியானது வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஒரு காரணி. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கூறிய புகழ்பெற்ற ஒரு கருத்தை நான் மீண்டும் கூறுகிறேன். அது என்னவென்றால், அமெரிக்க சாலைகள் நன்றாக இல்லை என்றாலும் அமெரிக்கர் பணக்காரர் தான். ஆனால் அமெரிக்க சாலைகள் நன்றாக இருந்தால் தான் அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கும். பிரதமரின் தலைமையில் இங்கு உருவாக்கப்படும் சாலைக் கட்டமைப்பானது , சுரங்க தொழில், வர்த்தகம், வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் சிறிய தொழில்கள் ஆகிவற்றை இணைக்கும். இந்த வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கும். என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.