ரஸ்யா தாக்குதல்…  மூன்றாம் உலகப்போர்… உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்.!

கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.!

சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள ஏதேனும் ஒரு நாட்டை தாக்கினால் கூட மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை தரவேண்டும் என ஜெர்மனியை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்திடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

நோட்டோ ( NOTO – North Atlantic Treaty Organization) அமைப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி என தெற்கு அட்லான்டிக் கடலை ஒட்டிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. அவ்வாறு மூன்றாம் உலகப்போரை ரஷ்யா தொடங்கினால், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு அளிக்க வேண்டும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், இந்த மூன்றாம் உலகப்போர் அபாயத்தை ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அறிந்திருப்பதாகவும் ஜெலன்ஸ்கி ஜெர்மனி செய்தியாளர்களிடம் கூறினார்.  மேலும் , ரஷ்யா, உக்ரைனின் முதல் ஆக்கிரமிப்பை செய்த போதே ஜெர்மனி உக்ரைனுக்கு ஆதரவை அளிக்காததால் ஏமாற்றமடைவதாகவே ஜெலென்ஸ்கி கூறினார்.

Leave a Comment