டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே  நேற்று ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியின்  இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில்  198 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இலங்கை 3 விக்கெட் இழந்து 320 எடுத்துள்ளனர். இதனால் இலங்கை  121 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்த இந்திய அணி..!

இந்த போட்டியின் போது ஒரு வினோதமான சம்பவம்  நடந்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 48-வது ஓவரின் போது உடும்பு ஓன்று மைதானத்தில் நுழைந்தது. உடும்பு மைதானத்தில் புகுந்ததால் போட்டி சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது.

48-வது ஓவரில் உடும்பு எல்லைக் கயிற்றின் அருகே மைதானத்தில் நுழைந்தது.  பின்னர், எல்லைக் கயிற்றின் அருகே சுற்றி திரிந்த உடும்பை  மைதானத்திலிருந்து அகற்ற மைதான ஊழியர்கள் முயன்றனர். இதைத்தொடர்ந்து, மைதான ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சியால் உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறியது.

கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது, ​​மைதானத்தில் பாம்புகள் நுழைந்ததால்  பலமுறை போட்டிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment