ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்..! வைரலாகும் அமிதாப் பச்சனின் ட்வீட்..!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் செயலியை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து பயனர்களை அதிரவைத்து வருகிறார். முதலில் பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு இலவசமாக புளு டிக் எனப்படும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அந்த புளூ டிக்கை கட்டணம் என அறிவித்து, யார் வேண்டுமானாலும் மாத தவணை செலுத்தி அடையாளங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஆனால், தற்பொழுது மாதத்தவனை கட்டணம் செலுத்தாதவர்கள் மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களின் புளூ டிக்கை எலான் மஸ்க் நீக்கிவிட்டார்.

அதன்படி, பாலிவுட் பிரபலமான அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கின் புளு டிக்கும் நீக்கப்பட்டது. ட்விட்டர் தனது ப்ளூ டிக் நீக்கியதை அடுத்து அமிதாப் பச்சனின் ட்வீட் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில், “ஹே ட்விட்டர், நான் சந்தா சேவைக்காக பணம் செலுத்திவிட்டேன். எனவே, தயவுசெய்து எனது பெயருக்கு முன்னால் உள்ள நீல நிற குறியை மீண்டும் வைக்கவும், இதனால் நான் அமிதாப் பச்சன் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நான் கூப்பிய கைகளுடன் கோரிக்கையை வைக்கிறேன், ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சந்தா சேவைக்கு பணம் செலுத்திய போதிலும் அதை அகற்றுவது குறித்த அமிதாப் பச்சனின் ட்வீட் வைரலானதையடுத்து அவரது கணக்கிற்கு ட்விட்டர் புளு டிக் மீண்டும் வந்தது. இதையடுத்து ஒரு புதிய ட்வீட்டில், நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்து, “சகோதரர் மஸ்க், மிக்க நன்றி. என் பெயருக்கு முன்னால் நீலநிற குறியீடு மீண்டும் வந்துவிட்டது. என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment