டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!

நாட்டின் 75வது குடியரசு தினம் விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கண்ணை கவரும் வகையில் நடைபெற்று வருகிறது.

சிமி இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

அதாவது, குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்வு டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு டெல்லி விஜய் சவுக்கில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பார்வையாளர்களை கவரும் வகையில் முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் குறிப்பாக இசைக்குழுவின் அணிவகுப்பு பிரமாண்டமாக இருந்தது. மேலும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் ஏற்றனர். இதன்பின், பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றியதை தொடர்ந்து முப்படை வீரர்கள் உள்ளிட்ட பிரிவினர் பாசறை திரும்பினர்.

Leave a Comment