போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை…பிப்.7-க்கு தள்ளிவைப்பு..!

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19-ஆம் தேதி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும் , ஜனவரி 3 மற்றும் 5 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 9, 10-ம் தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணையின் போது போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது.

பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில்  நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று இரண்டு அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.