ஒரே காரில் கார்கே வீட்டிற்கு சென்ற டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா..!

டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரும் ஒரே காரில் கார்கே இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக கர்நாடகா முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா புதிய  முதல்வராக ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்த சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரும் ஒரே காரில் கார்கே இல்லத்திற்கு சென்றுள்ளனர். கார்நாடகா முதல்வர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், இருவரும் கார்கே இல்லத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.