ராகுல்காந்தி விவகாரம்.! நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்.! திருமாவளவன் நோட்டீஸ்.!

ராகுல்காந்தி எம்பி பதவி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவையில் கொண்டு வந்தார் திருமாவளவன்.  

தற்போது இந்திய அரசியல் களத்தில் நாடுமுழுவதும், ராகுல்காந்தியின் எம்பி பதவி சஸ்பெண்ட் செய்யப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ளது. ராகுல்காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் தீர்மானம் :

ராகுல்காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிக எம்பி திருமாவளவன், இன்று நடைபெற போகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் ஒரு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

விவாதம் நடத்த கோரிக்கை  :

ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ததை ஒத்திவைக்கும் தீர்மானத்திற்கான நோட்டீசைதிருமாவளவன் அனுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் அதற்கு எதுவாக மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

நாளுமன்றம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ், திமுக  கூட்டணி கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட உள்ளனர் என எதிர்பார்க்கப்டுகிறது.

Leave a Comment